2025 மே 01, வியாழக்கிழமை

வீடொன்றின் மீது தாக்குதல்; வாகனங்களுக்கும் தீ வைப்பு

Editorial   / 2022 ஜனவரி 26 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன்

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டுத் தப்பி சென்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கார் ஒன்று சேதமடைந்துள்ளதுடன், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாகியுள்ளன.

கொக்குவில், நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் (24) இரவு , மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறுக்கும் மேற்பட்டவர்களை உள்ளடக்கிய வன்முறைக் கும்பலே, வீட்டினுள் புகுந்து, ​ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

இதன்போது, காருக்கு வைக்கப்பட்ட தீ பெரியளவில் பரவாத நிலையில்,  மோட்டார் சைக்கிள் இரண்டும் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .