2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

’வீட்டில் இருந்து முருகனைத் தரிசியுங்கள்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

நல்லூர் கோவில் தேர் உற்சவத்துக்கு பெருமளவில் மக்கள்  வருவதைத் தவிர்த்து வீட்டில் இருந்து முருக கடவுளைத் தரிசியுங்களென, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்தார்.

நல்லூர் ​கோவில் வருடாந்த தேர் உற்சவம்  தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் முகமாக, ஊடங்களுக்குக்  கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், குறித்த கோவில் உற்சவத்துக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியைப் பேணி  வழிபாட்டை மேற்கொள்வதற்கான  ஏற்பாடுகள் பொலிஸார்,  இராணுவத்தினர் அதேபோல் சுகாதாரப் பிரிவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளனவென்றார்.

“அதேபோல் சுகாதார பிரிவினரால் சுகாதார நடைமுறைகள் தொடர்பான விடயங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.  மக்கள் அதனை பின்பற்றி தமது வழிபாட்டினை  மேற்கொண்டு வருகின்றார்கள். 

“எனினும், அண்மைய நாள்களில் கோவிலுக்கு வரும் அடியவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படுகின்றது.  மக்கள் இது தொடர்பில் சற்று தெளிவாக இருக்க வேண்டும். தற்போது நாட்டில் கொரோனா தொற்று சற்று தணிந்து காணப்படுகின்றது. எனினும் சமூக தொற்று  தொடர்பில் நாம் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். 

“உதாரணமாக, அண்மைய நாள்களில் இராஜாங்கனை பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவருக்கு தொற்று  இனங்காணப்பட்ட  விடயம் தொடர்பில் நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

“யாழ்ப்பாணம் மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும் கொரோனா தொற்று ஏற்படா வண்ணம் பாதுகாப்பு பிரிவு மற்றும் சுகாதாரப் பிரிவினரின் முயற்சியால்  கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றோம்.  மக்களின் பூரண ஒத்துழைப்புடன் அதனைச் செயற்படுத்தியுள்ளோம்.

“எனினும், நல்லூர் ஆலயத்தை பொறுத்தவரையில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமிருந்தும் பொதுமக்கள் ஆலய தேர் உற்சவத்தில் கலந்துகொள்வது வழமை நாட்டில் கொரோனா தொற்று அச்ச நிலைமை காணப்படுவதன் காரணமாக, இம்முறை அவ்வாறு  இடம்பெற அனுமதிக்க முடியாது.

“இம்முறை நல்லூர் கோவில் உற்சவத்தின் தேர் உற்சவம் நாளை இடம்பெறவுள்ளது. இந்தமுறை கோவில் தேர் உற்சவத்துக்கு மக்கள் அதிகளவில் வருவதை தவிர்த்து  சமூகத்தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

“நல்லூர் கோவில் தேர் உற்சவத்துக்கு அதிகளவில் வருகை தராது வீடுகளிலிருந்து தரிசியுங்கள். அது   உங்கள் எதிர்காலத்துக்கு நல்லதாக அமையும்” எனவும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X