2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வீட்டுக்குள் புகுந்து திருடர்கள் கைவரிசை

Freelancer   / 2022 பெப்ரவரி 16 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - அராலி தெற்கில் வீடொன்றில் புகுந்த திருடர்கள் சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளனர். 

குறித்த வீட்டில் வசிப்போர் நேற்றைய தினம் தமது உறவினர் வீடொன்றுக்கு சென்று விட்டு, வீடு திரும்பிய போது , வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதனை கண்டுள்ளனர்.

பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது , பொருட்கள் சிதறி கிடந்துள்ளதுடன் , நகைகள்  இருந்த அலுமாரியில் இருந்த பொருட்களும் சிதறி காணப்பட்டன. 

அலுமாரிக்குள் வைக்கப்பட்டு இருந்த 11 பவுண் தாலிக்கொடி ஒன்றரை பவுண் சங்கிலி என்பன களவாடப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் வீட்டாரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .