2025 மே 10, சனிக்கிழமை

வீட்டுத்திட்டம் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2020 செப்டெம்பர் 13 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், என்.ராஜ்

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொம்மை வெளி, வசந்தபுரம் பிரதேச மக்கள், வீட்டுத்திட்டம் கோரி, இன்று (13) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதாகக் கூறி, பழைய வீட்டை இடித்து புதிய வீட்டுத் திட்டத்துக்குத் தயாராகுங்கள் எனக் கூறிய அரச அதிகாரிகள் தற்போது அசமந்தமாக செயற்படுகின்றனர் என அம்மக்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்தப் பிரதேசத்தில் 92 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் எனவும் தற்போது மழை காலம் நெருங்குவதா,ல் தங்களுக்கான வீட்டு திட்டத்தைத் துரிதப்படுத்தி, தாங்கள் வசிப்பதற்கு ஒரு வீட்டை அமைத்துத் தருமாறும் இம்கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X