2025 ஜூலை 26, சனிக்கிழமை

வீட்டுத்திட்டம் கோரி தாலிக்குளத்தில் ஆர்ப்பாட்டம்

Yuganthini   / 2017 ஜூலை 26 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
தமக்கான வீட்டுத்திட்டத்தை வழங்குமாறு கோரி, வவுனியா - தாலிக்குளம் மக்கள், இன்று (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாலிக்குளத்தில், கடந்த 10 வருடங்களாக வசித்து வருகின்ற சுமார் 30 குடும்பங்களுக்கு, இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை.

போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களே, இங்கு அதிகமாக வசிக்கின்றனர். இந்நிலையிலேயே, தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி, தாலிக்குளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, போரினால் பாதிக்கப்பட்டு, தமது உடைமைகள் அனைத்தையும் இழந்து, அகதி வாழ்வு வாழ்ந்து, அங்கு குடியேறியிருந்த நிலையில் கூட, தமக்கு தற்போது வரை வீட்டுத்திட்டம் வழங்கப்படாமையினால், தமது சொந்த நிலத்திலேயே அகதி போன்று வாழ வேண்டிய நிலையே தற்போது உள்ளது என, அந்த மக்கள் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X