2025 மே 15, வியாழக்கிழமை

வீதிக்கு நீர் விசிறியமை தொடர்பில் விசாரணை

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

தியாக தீபம் திலீபனின் நினைவுதின வாரத்தின் இறுதிநாள் நிகழ்வின்போது, வீதிக்கு நீர் விசிறுவதற்காக, யாழ்ப்பாணம் மாநகர சபையின் நீர்த்தாங்கி பயன்படுத்தப்பட்டமை குறித்து, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வு, நல்லூருக்கு அருகாமையில் அமைந்துள்ள நினைவிடத்தில், செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதியன்று நடைபெற்றுது.

இதன்போது, வீதியின் சூட்டைத் தணிக்கும் முகமாக, யாழ்ப்பாணம் மாகர சபைக்குச் சொந்தமான நீர்த் தாங்கியைக் கொண்டு, நீர் விசிறப்பட்டது.

இந்நிலையில், குறித்த நீர்த் தாங்கியானது, யாருடைய அனுமதியில் அங்கே கொண்டு செல்லப்பட்டது, யார் அதனைக் கோரினார்கள்? உள்ளிட்ட கேள்விகளை, யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளரிடம் எழுத்துமூலம் எழுப்பி, அதற்கான விளக்கத்தைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .