2025 மே 02, வெள்ளிக்கிழமை

வீதியில் மயங்கிய வயோதிபர் உயிரிழப்பு

Niroshini   / 2021 டிசெம்பர் 20 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், செந்தூரன் பிரதீபன்

வீதியில் பயணித்த வயோதிபர் ஒருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம், யாழ்ப்பாணம் - திருநெல்வேலி சிவன் - அம்மன் வீதியில் உள்ள கிளி கடைக்கு அருகாமையில், இன்று (20) காலை  இடம்பெற்றுள்ளது.

கந்தர்மடம் - பழம் வீதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் செல்வரத்தினம் (வயது 67) என்பவரே, இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .