2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’வீதியோர வியாபாரங்களுக்குத் தடை’

Editorial   / 2020 ஜூன் 15 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பொது இடங்களில், மரக்கறிகள், மீன்கள் விற்பனை செய்யப்படுவது, இன்று (15) முதல் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த. தியாகமூர்த்தி, இதனை மீறி செயற்படும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரித்தார்.

இது தொடர்பில், நேற்றைய தினம் (15) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுசந்தைகள் பூட்டப்பட்டிருந்த காலப்பகுதியில், அதற்கு மாற்றீடாக பொது இடங்களில் சமூக இடைவெளிகளை பின்பற்றி வியாபாரம் செய்ய சந்தை வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதென்றார்.

தற்போது நாட்டில், கொரோனா வைரஸின் தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வழமை நிலைமைக்குத் திரும்பியுள்ளதையடுத்து, பொதுசந்தைகளை மீளத் திறந்துள்ளதாகவும் எனவே, நேற்று முதல் வீதிகளில் மரக்கறிகள், மீன்களை விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளனவெனவும், தியாகமூர்த்தி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X