2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வெடிபொருளை வெடிக்க வைத்த நால்வர் கைது

Editorial   / 2020 ஜூலை 13 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

குப்பைக்குள் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருளை வெடிக்க வைத்த நால்வர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் வெடிபொருள் வெடித்ததில் கைகளில் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கீரிமலை கோவில் பகுதியில் நேற்று  (12) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குப்பைக்குள் காணப்பட்ட பற்றியுடன் கூடிய வீரியம் குறைந்த வெடிபொருளை மேற்படி நால்வரும் கண்டெடுத்து, அதை வெட்டி நெருப்பு வைத்த போது அது வெடித்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள், சட்டத்துக்கு புறம்பாக வெடிபொருளை வெடிக்க வைத்ததுடன், அதன் பின்னர் ஓடி ஒழித்தனர். அதனால் பொலிஸாரும் இராணுவத்தினரும் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே, மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X