2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெட்டுக்காயங்களுடன், பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Editorial   / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே.மகா

வடமராட்சி அம்பன் பகுதியில் வீடொன்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன், பெண்ணொருவரின் சடலம் இன்று (02) மீட்கப்பட்டுள்ளது என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இனந்தெரியாத நபர்களால் இன்று (02) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ள இவ் வாள்வெட்டுச் சம்பவத்தில், நல்லதம்பி ரேவதி (வயது 58) என்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய தாயாரான நல்லதம்பி ராசம்மா (வயது 75) வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X