2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

’வெளிச்ச வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை’

Niroshini   / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில்,  நான்கு இடங்களில் வெளிச்ச வீடுகளை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக, நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், நெடுந்தீவு பிரதேசத்தில், சுமார் 689க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

இந்த நிலையில், தொழிலுக்குச்  செல்லும் தொழிலாளர்கள், இரவு நேரங்களில் கரை திரும்புவது பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்த அவர், அதனால், கரையோரப் பகுதிகளில் முக்கியமான இடங்களில் வெளிச்ச வீடுகளை அமைத்துக் தருமாறும் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கோரியுள்ளனர் எனவும் கூறினார்.

அதாவது  செபநாயகபுரம்,  பெரியதுறை,  பனங்காணி,  குயிந்தா  ஆகிய நான்கு இடங்களிலும் வெளிச்ச வீடுகளை அமைப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இருப்பதாகவும் எதிர்காலத்தில் அவற்றை  அமைப்பதற்கான  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்,  சத்தியசோதி மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .