2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டு ஆசை காட்டி யாழில் கோடிக்கணக்கில் மோசடி

Freelancer   / 2023 டிசெம்பர் 23 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி, கடந்த இரு வாரங்களில், யாழில் இரண்டரை கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை போலி முகவர்கள் மோசடி செய்துள்ளனர் என பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடந்த 2 வார காலப் பகுதிக்குள் 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

அவற்றின் அடிப்படையில் சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களில் வந்த விளம்பரங்களை நம்பியே பணத்தினை இழந்துள்ளனர். 

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விளம்பரங்களை நம்பி பணத்தினை கொடுத்து ஏமாற வேண்டாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.  R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .