Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 24 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
இலங்கையின் நீதி முறைமையினூடாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வேண்டுமெனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, அவ்வாறு தீர்வைக் காண்பதற்குரிய வசதி இந்த நாட்டிலேயே உள்ளதெனவும் ஆகவே வெளிநாட்டு நீதிபதிகளை நாட்டுக்கு கொண்டு வந்து இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வை அல்லது நீதியை தேட வேண்டிய அவசியம் இல்லையெனவும் கூறினார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களுக்கான மறுசீரமைப்பு செயற்திட்ட மநாடு, யாழ்., தட்டாதெருச் சந்திக்கு அருகாமையிலுள்ள லக்ஷ்மி மண்டபத்தில் நேற்று (23) நடைபெற்றது. இதில் கலந்தகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், உண்மையில் சுதந்திரம் என்பது உணவை உட்கொண்டு நித்திரை கொள்வதல்லவெனவும் சுதந்திரம் என்பது வாழ்வாதாரம் நல்ல நிலைக்குச் சென்று சக்திக்கு மேலாக வாழ்வது தான் சுதந்திரமாகுமெனவும் தெரிவித்தார்.
யாழில் எட்டு சதவீதமான மக்களுக்குகு சுத்தமான நீர் இல்லையெனத் தெரிவித்த அவர், அதே போன்று 8 சதவீதமான மக்களுக்கு மின்சாரம் இல்லையெனவும் கூறினார்.
“வடபகுதியிலள்ள அரசியல்வாதிகள் பலர் தென்பகுதி தண்ணீர் வேண்டாம் என்று கூறினார்கள். தண்ணீருக்கு வடக்கு - தெற்கு என்ற வேறுபாடு இல்லை. தென்பகுதியில் இருக்கும் நீரை வடக்குக்கு கொண்டுவந்து வடக்கு மக்களின் வாழ்வை வளப்படுத்த ஜனாதிபதி முயற்சி செய்கின்றார்” எனவும் அவர் தெரிவித்தார்.
யுத்தத்தின் பின்னர் போதைப்பொருள் பாவனை வடக்கில் அதிகரித்தள்ளதாகத் தெரிவித்த அவர், வடபகுதி மக்களை அழிக்க தான் போதைப் பொருள் பாவனை தூண்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை, பேதமில்லாமல் சுதந்திரத்தை பெற்றெடுத்த போதும் மொழியினால் இங்கு பிரச்சினை ஏற்பட்டதாகத் தெரிவித்த அவர், மொழியால் ஏற்பட்ட பிரச்சினை இறுதியில் இனப் பிரச்சஜனையாக முடிவுற்றதாகவும் கூறினார்.
அதிலும், வடபகுதியிலும் தென்பகுதியிலும் உள்ள அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையை அரசியல் மயப்படுத்தி தங்கள் அரசியல் தேவைக்காக பயன்படுத்தியதாகவும், அவர் தெரிவித்தார்.
“இதனால் இறுதியில் இளைஞர்கள் ஆயுதத்தை கையில் எடுத்தார்கள். இப்போது ஆயுதம் இல்லாமல் அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ளும் வழிமுறையாக மீண்டும் அரசியல் தீர்வு குறித்த பேசப்படுகிறது. இவ்வாறான நிலையில் மீண்டும் சில காரணங்களைச் சொல்லி தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பிரிப்பதற்கான வேலைத் திட்டங்களில் அரசியல் வாதிகள் இறங்கியுள்ளனர்” எனவும் அவர் கூறினார்.
39 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago
2 hours ago