2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வெளிநாட்டு பிரஜை மீது தாக்குதல்; சந்தேகநபர் விடுதலை

Freelancer   / 2022 ஜூலை 03 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

கடந்த 25 ஆம் திகதி வயாவிளான் பகுதியில் காணி பிரச்சினை ஒன்று தொடர்பில் வெளிநாட்டில் இருந்து வந்த பிரஜை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவரின் கண்ணில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் மத்திய சபை ஊடாக சமாதானமாக செல்லுமாறு பொலிஸார் கூறி அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பிரஜையான 60 வயதுடைய  முத்துதம்பி தேவராஜன் என்ற நபர் மனித உரிமை ஆணைக்குழுவில் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதுடன், இது தொடர்பில் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வந்த நபர் தனது காணிக்குள் வேலை செய்து கொண்டிருந்த பொழுது அங்கு வந்த குட்டியப்புலம் பகுதியை சேர்ந்த நபர் இது தன்னுடைய காணி எனக் கூறி வெளிநாட்டு பிரஜையை தாக்கியுள்ளர். கண்ணில் பாதிப்படைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மூன்று நாட்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியினால் மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மத்திய சபை ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு கோரி இருந்த பொழுதும் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் விடுவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் அச்சுவேலி போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு எதிராக மனித உரிமை ஆணைய குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .