2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வேலணை பல்பரிமாண நகரமாகின்றது

Niroshini   / 2021 ஜூலை 11 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

வேலணை -  வங்களாவடி நகர பகுதியை பல்பரிணாம நகரமாக அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்துக்கமைய. நாட்டில் 100 நகரங்களை பல்பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ். யாழ்ப்பாணம் மாவட்டத்தில், 6 பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்த முயற்சி காரணமாக, யாழ். மாவட்டத்தின் வேலணை, சாவகச்சேரி, கொடிகாமம்,  நாவற்குழி, தெல்லிப்பளை, மருதனார்மடம் ஆகிய  பிரதேசங்கள் குறித்த பல்பரிமாண நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், நேற்று (10) வேலணை - வங்களாவடி நகர் பகுதியின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கான கள ஆய்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .