2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வைத்தியசாலை கழிப்பறையில் நோயாளியின் சடலம் மீட்பு

Niroshini   / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ் தில்லைநாதன்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், வைத்தியசாலையின் கழிப்பறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடுப்பிட்டி - கம்பர்மலையைச் சேர்ந்த 49 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுகவீனம் காரணமாக, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக குறித்த நபருக்கு, வெள்ளிக்கிழமை (27) இரவு, கொரோனா தொற்று ஏற்பட்டமை உறுதிபடுத்தப்பட்டது.

இதனால் ஏறப்ட்ட பயத்தை அடுத்து, வைத்தியசாலையில் உள்ள கழிப்பறையிலிருந்த திரவம் ஒன்றை அருந்தி, குறித்த நபர், தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா விசாரணையை மேற்கொண்டு, பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டதுடன், சடலத்தை யாழ். மாநகரசபை மின்சார தகனம் சாலையில் எரியூட்டுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டாலும், உரிய சிகிச்சையின் பின்னர், நோயாளிகள் பூரண சுகம் பெற்று, வீடு திரும்பலாமென, பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா தெரிவித்தார்.

எனவே, இவ்வாறான தவறான முடிவு எதனையும் எடுக்க தேவை இலலை எனவும், அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .