2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘வைத்தியசாலை கோயில்; மயானம் அல்ல’

Editorial   / 2017 ஜூலை 04 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- வி.விஜயவாசகன், கே.பகவான்

யாழ். கொடிகாமம் பிரதேச வைத்தியசாலை முன்பாக, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில், இன்று (04) ஈடுபட்டனர்.

விபத்தில் காயமடைந்த ஒருவரை, வைத்தியசாலைக்கு கடந்த வாரம் கொண்டு சென்ற போதும், உரிய சிகிச்சைகள் வழங்கப்படாமையால், அவர் உயிரிழந்துள்ளார்.

இதனைக் கண்டித்தும், இவ்வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரை நியமிப்பதுடன், அம்புலன்ஸ் ஒன்றை, வைத்தியசாலைக்கு வழங்க வேண்டும் எக்ன கோரியும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

“20 கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு ஒரே வைத்தியசாலையாகக் காணப்படும் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர்கள் இல்லை. அம்புலன்ஸ் வண்டியும் இல்லை. இதனால் அவசர உதவி தேவைப்படும் நோயாளர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. கடந்த வாரம் விபத்தில் படுகாயமடைந்த ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு வந்திருந்தோம். அந்நேரம் வைத்தியர்கள் எவரும் இங்கு கடமையில் இருக்கவில்லை. இதனால், அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்க முன்பு அவர் உயிரிழந்து விட்டார். எனவே, இவ்வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர்களை நியமித்து எமது உயிர்களின் மதிப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்” என தெரிவித்தனர்.

இதேவேளை, “நோயாளர் நலன்பேண வேண்டியவர்களே, நோயாளர்களை உதாசீனப்படுத்தாதே, வைத்தியசாலை கோயில்; மயானம் அல்ல, வைத்தியசாலையே உங்கள் சேவை, எங்களுக்கு தேவை, கடமையை சரிவரசச் செய்தால் இழப்புக்களை தடுக்க முடியும்” ஆகிய பதாகைகளை தாங்கி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X