Editorial / 2018 மார்ச் 29 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்

“விடா முயற்சியுடனும் அர்ப்பணிப்புடனும் கல்வியைத் தொடர்ந்ததே தன்னுடைய வெற்றிக்கு காரணமென” அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி ரீதியில் முதலிடம் பெற்ற யாழ்.வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி மிருதி சுரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.
நேற்று (28) இரவு வெளியாகியுள்ள 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தமிழ்த் மொழி மூலமாக முதலாமிடத்தைப் பெற்றிருந்த மாணவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்கள் கல்வியைத் தொடர்வதுக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களது உதவியுடன் விடா முயற்சியுடன் நான் கல்வியைத் தொடர்ந்தேன். அதனூடாக சிறந்த பெறுபேற்றையும் பெற்றிருக்கின்றேன். நான் இந்தப் பெறுபேறுகளைப் பெறுவதுக்கு உதவிய அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நான் கல்வியுடன் இணைப்பாட விதானங்களிலும் ஈடுபட்டிருக்கின்றேன். அவ்வாறு செயற்படுவதுடன் விடா முயற்சியுடன் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டால் மாணவர்கள் கல்வியில் சாதிக்கலாம்” என்றார்.
இதேவேளை “எதிர்காலத்தில் சிறந்ததொரு வைத்தியராக வந்து இந்த மக்களுக்கு என்னாலான அனைத்துச் சேவைகளையும் செய்யவேண்டும் என்பதே என்னுடைய இலட்சியம்” என்றும் மாணவி சுருதி மேலும் தெரிவித்துள்ளார்.
12 minute ago
30 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
30 minute ago
48 minute ago
2 hours ago