2025 மே 12, திங்கட்கிழமை

ஸ்மார்ட் கோபுரம் விவகாரம்; தடைக் கோரிய மனு தள்ளுபடி

Editorial   / 2020 ஜூலை 21 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனுவை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், இன்று (21) தள்ளுபடி செய்துள்ளது.

“மனுதாரரின், மனுவில் உள்ள குறைப்பாடு, எழுத்தாணை மனுவுக்குத் தேவையான கருவூலங்கள் தொடர்பில் திருப்திப்பாடு ஏற்படுத்தப்படாமை, மனுதாரரிடம் உள்ள கீழ்த்தரமான நோக்கம் என்பவற்றால் இந்த எழுத்தாணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி, 2019ஆம் ஆண்டு ஜூலை, யாழ்ப்பாணம் நவாந்துறை வடக்கைச் சேர்ந்த செல்லப்பர் பத்மநாதன் என்பரால் யாழ். மேல் நீதிமன்றில் நீதிப் பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவில், யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர், யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர், Edotco Services Lanka (pvt)LTD எனும் நிறுவனத்தினர் ஆகியோர் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த நீதிப் பிரேரணை மனு, இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X