Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு எதிராக பிரேரணை கொண்டு வருவது தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர் சிலர், யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல் மேற்கொண்டமை தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர் க.சிவநேசன் அம்பலப்படுத்தினார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற போது, விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், 8 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட பிரேரiணை சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கருத்துத் தெரிவித்த சிவநேசன், 'பிரேரணை கொண்டு வரும் போது நான் அமர்வில் இல்லை. இருந்திருந்தால் எதிர்ப்பை வெளியிட்டிருப்பேன். என்னிடம் ஒருமுறை ஆளுங்கட்சி உறுப்பினர் ஆயுப் அஸ்மின் கையெழுத்து வாங்கினார் என்றார்.
இதன்போது குறுக்கிட்ட அஸ்மின் 'எப்போது கையெழுத்து வாங்கினேன்?' என்றார். அதற்குப் பதிலளித்த சிவநேசன், 'முதலமைச்சர் தமிழ் மக்கள் பேரவையில் இணைத்தலைமை வகிக்கக்கூடாது என நீங்கள் கையெழுத்து வாங்கினீர்களே!' என்றார்.
எதிர்பாராத இந்தக் கருத்தை சமாளித்த அஸ்மின், 'அது கட்சித் தலைமை கேட்டதின் அடிப்படையில் வாங்கினேன்' என்றார். இருந்தும், விடாமல் தொடர்ந்த சிவநேசன், 'விவசாய அமைச்சருக்கு எதிரான பிரேரணை கொண்டு வருவது தொடர்பில் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் கலந்துரையாட வருமாறு கூப்பிட்டீர்கள் தானே!' என்றார்.
அதற்குப் பதிலளித்த அஸ்மின், 'அது கட்சி அரசியல் சம்பந்தப்பட்ட விடயம். அதனை இங்கு கூறக்கூடாது'என மழுப்பலாக பதிலளித்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago