2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஹர்த்தாலுக்கு அழைத்த இருவர் கைது

George   / 2015 நவம்பர் 12 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

சாவகச்சேரி பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று, நாளை வெள்ளிக்கிழமை (13) ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர்.

அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் அழைப்பின் பேரில் வடமாகாணத்தில் நாளை வெள்ளிக்கிழமை (13) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்தக் ஹர்த்தாலுக்கு ஆதரவு சேர்க்கும் வகையில், குறித்த இருவரும் வர்த்தக நிலையங்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் என சாவகச்சேரி பொலிஸார மேலும் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .