2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஹர்த்தால் தோல்வி கண்டது

Editorial   / 2018 ஜூன் 30 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

சுழிபுரம் மாணவியின் கொலையைக் கண்டித்தும் நீதி கோரியும் பூரண கடையடைப்பு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவில்லை.

சுழிபுரத்தில் மாணவி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதி கோரியும் மாணவர்களும் பொது மக்களும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, வடக்கு மாகாணம் முழுவதாமாக நேற்றைய தினம் (29) ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் பாடசாலைகள், பஸ்கள், கடைகள் என்பன ஒரு சில இடங்களில் இயங்காவிட்டாலும், ஏனைய இடங்களில் இயங்கிக் கொண்டிருந்தன.

இவ்வாறு ஹர்த்தால் முழுமையாக நடைபெறாது சில இடங்களில் சிலர் மட்டுமே கடைகளைப் பூட்டியும் பஸ்கள் ஓடாமலும், பாடசாலைகள் இயங்காமலும் இருக்கின்றதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இந்த ஹர்த்தாலுக்கு பல தரப்பபினர்களும் ஆதரவைத் தெரிவிக்காத நிலையிலையே, ஹர்த்தால் பூரணமாக நடைபெறவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X