Janu / 2023 செப்டெம்பர் 07 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் 46 வயதுடைய ஊழியர் ஒருவர் வியாழக்கிழமை (07) ஹெரோயினுடன் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த கைது நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது சந்தேகபரிடமிருந்து 30 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர், ஹெரோயினை விற்பனை செய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகபர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
பு.கஜிந்தன்

22 minute ago
26 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
1 hours ago
1 hours ago