2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோயினுடன் கைதான மாணவர்களுக்கு விளக்கமறியல்

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 16 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோயின் போதைப்பொருளை நுகர முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 17 வயதுடைய 3 மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் நேற்று (15) உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை அதிகரித்துள்ளதாக அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களால் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் அங்கு இரகசிய சுற்றுக்காவலில் பொலிஸார் ஈடுபட்டிருந்த போது, சுமார் 100 மில்லிக்கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் நேற்று (15) வெள்ளிக்கிழமை ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

“சந்தேகநபர்கள் மூவரும் மாணவர்கள். அவர்கள் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காகக் காத்திருக்கின்றனர்" அவர்களின் சட்டத்தரணி மன்றுரைத்தார்.

வழக்கை விசாரித்த நீதிவான் சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X