2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

ஹெரோய்னுடன் பெண் உட்பட மூவர் கைது

Princiya Dixci   / 2022 மார்ச் 16 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிப்புலம் - கலட்டி பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் நேற்றிரவு (15) கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பனிப்புலம் - கலட்டி பகுதியிலுள்ள வீடொன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இதன்போது வீட்டில்  1 கிராம் 70 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதையடுத்து, அதனை வைத்திருந்த குற்றச்சாட்டில் 36 வயது பெண்ணை கைது செய்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட மேலதிக விசாரணை மற்றும் சோதனை நடவடிக்கையின் போது சங்கானையை சேர்ந்த 27 வயது இளைஞனும், கொலன்னாவ, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X