2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் வார இறுதி உதவி ஆசிரிய பயிற்சிகளை மேற்கொண்டவர்கள் 21ஆம் திகதி தமது பதிவுகளை மேற்கொள்ள ம

Super User   / 2012 ஜனவரி 17 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

புத்தளத்தில் வார இறுதி உதவி ஆசிரிய பயிற்சிகளை மேற்கொண்டவர்கள் இம்மாதம் 21ஆம் திகதி தமது பதிவுகளை புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியிலும் அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் பாடசாலையில்  பயிற்சிகளை மேற்கொண்டுவந்தவர்கள் இம்மாதம் 23 ஆம்  திகதி கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலையின் மன்னார் கிளையிலும் தமது பதிவுகளை செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார்.

இவ்விரு மாவட்டங்களில் பயிற்சி பெறும் உதவி ஆசிரியர்கள் 301 பேருடன் கோப்பாயில் இறுதி 3 மாத கால பயிற்சியை செய்பவர்கள் இம்மாதம் 16 ஆம் திகதிக்கும் 20 ஆம் திக்குமிடையில் தமது பதிவுகளை கோப்பாய் ஆசிரிய பயிற்சி கலாசாலையிலும் செய்து கொள்ளுமாறும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உதவி ஆசிரியர்களின் நலன்களையும் அவர்கள் தற்போது கடமை புரியும்  பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளையும் கவனத்தில் கொண்டு புத்தளம் மற்றும் மன்னாரில் தமது இறுதி 3 மாதகால ஆசிரிய பயிற்சியினை  நிறைவு செய்ய கல்வி அமைச்சு அனுமதியினை வழங்கியுள்ளது.

இவ்வாசிரிய உதவியாளர்கள் கோப்பாய் ஆசிரிய பயிற்ச்சி கலாசாலையில் தமது இறுதி மாத கால பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்தமை குறித்து, கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணிப்புரைக்கமைய கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் வட மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சு வார்த்தையின் பின்னர் மேற்படி முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X