2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வென்னப்புவையில் கடந்த வருடம் மது வரி அதிகாரிகளால் 12,500,000 ரூபா தண்டம் அறவீடு

Kogilavani   / 2012 ஜனவரி 10 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

வென்னப்புவ பிரதேச மதுவரி திணைக்கள அதிகாரிகள் கடந்த வருடம் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின் மூலம் ஒரு கோடியே இருபத்தி ஐந்து இலட்சம் ரூபா தண்டமாக அறவிடப்பட்டுள்ளது.

தங்கொட்டுவை மற்றும் வென்னப்புவ ஆகிய இரு பிரதேச செயலகப் பிரிவுகளின் 99 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உள்ளடங்கும் வகையில் இவ்வாறான சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றுள் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் 10, ஐம்பது சட்டவிரோத கசிப்பு விற்பனை நிலையங்களும் சுற்றிவளைக்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின்  வைத்திருந்த மூவரும், கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படும் ஐவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் வரி செலுத்தாது இந்நாட்டிற்குள் கொண்டு வரப்படும் சிகரட்டுக்களை விற்பனை செய்வதற்காக தம்மிடம் வைத்திருந்த நூறு பேரும், சட்டவிரோத கசிப்பினை தம்வசம் வைத்திருந்ததாகச் கூறப்படும் 802 பேரும் இவ்வாறு கடந்த வருடத்தில் மதுவரி திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மேலும் பலருக்கு தண்டம் விதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வென்னப்புவ மதுவரி அலுவலகப் பொறுப்பதிகாரி டபிள்யூ. சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய இந்த சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X