2025 மே 14, புதன்கிழமை

அநுராதபுரம் நகரத்தை அபிவிருத்தி செய்ய 20 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு

Kogilavani   / 2013 நவம்பர் 27 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ. சபூர்தீன் 

தலைநகருக்கு வெளியே பிரதேச தலைநகரங்களை அபிவிருத்தி செய்யும் அரசின் திட்டத்தின் கீழ் அநுராதபுரம் நகரத்தை அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதோடு இதற்காக 20 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது எனவும் அநுராதபுரம் மாநகர பிதா எச். பீ. சோமதாச தெரிவித்தார்.

இதன் கீழ் ஒயாமடுவ தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடைபெற்ற காணியிலுள்ள நிலப்பரப்பில் 200 ஏக்கர் காணியில் அநுராதபுரம் சிறைச்சாலையினை அமைக்கவும், புகையிரத திணைக்களத்தின் ஊழியர்களுக்கான வீடுகள் அகற்றப்பட்டு  யாழ்ப்பான வீதியிலுள்ள காணியில் வீடுகளை அமைக்கவும், நகர அபிவிருத்தி திட்டத்தில் உள்ளடக்கப்படும் பகுதிகளிலுள்ள அரசிற்குச் சொந்தமான 300 வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடமைப்புத்  தொகுதியொன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் வாணிப தொகுதிக்காக அரச மரக் கூட்டுத்தாபனம், சிறு கைத்தொழில் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் மாகாண பொறியிலாளர் அலுவலகம் ஆகியவற்றுக்குச் சொந்தமான சகல காணிகளும் நகர அபிவிருத்திக்காக எடுக்கப்பட்டு அவற்றுக்கு மாற்றீடாக வேறு
இடங்களில் காணி மற்றும் கட்டிடங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் அநுராதபுரம் கும்மிச்சங்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதியை சுற்றுலா வலயமாக மாற்றும் பணிகளும் ஆரம்பிக்கபட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .