2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வடமேல் மாகாண அபிவிருத்திக்கு ரூ. 2001 கோடி ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 29 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

அடுத்த வருடத்தில் வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கென இரண்டாயிரத்து ஒரு கோடி ரூபாய் நிதி இம்முறை வடமேல் மாகாண சபையின் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கிடப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணத்தின் குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்திக்கே இந்நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணத்தில் 2012ம் ஆண்டுக்காக வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கே அதிகூடிய நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு சுமார் 36 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளது. சுகாதாரப் பணிகளுக்காக 33 கோடி ரூபாயும், கல்வி அபிவிருத்திப் பணிகளுக்காக 29 கோடி ரூபாயும் இவ்வாறு ஒதுக்கிடப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணத்தில் கல்வித்தரத்தினை மேம்படுத்துவத்காக வேலைத்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த வடமேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க, தற்போது கல்வித்துறையில் வடமேல் மாகாணம் முதன்மை நிலைக்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X