2025 மே 22, வியாழக்கிழமை

ஆயுர்வேத நிலையங்களை முன்னேற்ற 35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

Super User   / 2013 ஜனவரி 09 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

வட மத்திய மாகாணத்திலுள்ள ஆயுர்வேத நிலையங்களிலுள்ள அடிப்படை வசதிகளை முன்னேற்றும் நோக்கில் 35 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நோய்த் தடுப்பு சேவைகளை அபிவிருத்தி செய்தல், ஆயுர்வேத மூலிகை உற்பத்தியினை விருத்தி செய்தல், மூலிகை பொருட்களை சேகரித்தல் ஆகிய செயற்பாடுகளுக்காக இந்நிதி செலவிடப்படவுள்ளது என வட மத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

இதேவேளை மாகாணத்திலுள்ள சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆயுர்வேதக் கிராமம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலை மாணவர்கள் மற்றும் அறநெறி பாடசாலைகளிலுள்ள மாணவர்களை ஆயுர்வேதம் தொடர்பாக தெளிவுபடுத்தி மூலிகைத் தோட்டங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X