2025 மே 14, புதன்கிழமை

புத்தளம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட 6 பாடசாலைகள் அபிவிருத்தி

Super User   / 2013 நவம்பர் 20 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

வட மேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிரின் கோரிக்கைக்கமைய புத்தளம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஆறு பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

மதவாக்குளம் முஸ்லிம் மஹா வித்தியாலயம், கம்மந்தழுவ இரு மொழி பாடசாலை, வட்டக்கண்டல் முஸ்லிம் வித்தியாலயம், பாலக்குடா சென் பீட்டர் ஆரம்ப பாடசாலை, ஏத்தாளை ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயம் மற்றும் கற்பிட்டி அல் மதீனா ஆரம்ப பாடசாலை என்பனவே இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இவ் அபிவிருத்தி பணிகள் யாவும் எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கென வட மேல் மாகாண சபையினால் சுமார் 70 இலட்சம் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் பிறந்த தினம் மற்றும் இரண்டாவது தடவையாக பதவியேற்று மூன்று வருட பூர்த்தி என்பனவற்றினை முன்னிட்டு வடமேல் மாகாண சபையினால் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .