Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 10 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம். ஹிஜாஸ்)
வடமேல் மாகாணத்தில் வீடில்லாத குடும்பங்களின் எண்ணிக்கை 65,000 ஆக உள்ளதாகவும், அவற்றில் புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 48,000 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லையெனவும் வடமேல் மாகாண வீடமைப்பு, வீதி அபிவிருத்தி, மின்சார மற்றும் கடற்றொழில் அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்தார்.
வீடில்லாதவர்களுக்கு வீடுகளினை கட்டுவதற்காக இவ் வருடமும் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளை வடமேல் மாகாண அமைச்சு தனியார் மற்றும் அரச வங்கிகளுடன் இணைந்து செய்துள்ளது.
இதனடிப்படையில் வீடமைப்பு கடனாக ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் வரை கடனாக பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கடன் தொகையில் 60 வீதத்தினை மாகாண அமைச்சு 2 வீத வட்டியிலும் மிகுதி 40 வீதம் வங்கி மூலமாகவும் பெற்று தரப்பபடும் என இன்று சிலாபத்தில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த மேலும் தெரிவித்தார்.
இதில் அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago