2025 மே 23, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமான ஆஸி செல்ல முயன்ற 67பேர் சிலாபத்தில் கைது

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 09 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 67 பேரை சிலாபம் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 45 தமிழர்களும் 22 சிங்களவர்களும் அடங்குவதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்ட இவர்களுள் 7 பெண்களும் 6 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட அனைவரும் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, சிலாபம், மட்டக்களப்பு, இங்கிரிய மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளுக்காக இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக கடற்படையின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X