2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கலேவெலவில் விபத்து: ஒருவர் பலி; 7 பேர் காயம்

Kogilavani   / 2013 ஜூலை 12 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரம் கலேவெலவில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 7 பேர் காமயடைந்துள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

கலெவெல சுகாதார மத்திய நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸொன்றுடன் லொறியொன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த லொறியானது மற்றுமொரு வாகனத்தை முந்திசெல்ல முற்பட்டபோது தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸின் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பஸ்ஸின் சாரதி உட்பட தரிப்பிடத்தில் நின்றவர்கள் மற்றும் பஸ்ஸில் இருந்த பயணிகள் 7பேர் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் கலேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற மூன்று விபத்துக்களில் சிலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X