2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முன்னேஸ்வர தேவஸ்தானம் ரூ. 500 மில்லியன் செலவில் புணரமைப்பு

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 14 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

பிரசித்திபெற்ற சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வர தேவஸ்தானம் அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்குள் 500 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக முதல் 3 ஆண்டுகளுக்குள் வீதி புணரமைப்பு, 300 சிறுவர்களினை பராமரிக்கக்கூடிய அநாதை இல்லம், குருமார்களுக்கான மற்றும் யாத்திரிகர்களுக்கான தங்குமிட வசதிகள், குருமார் பயிற்சி நிலையம் உட்பட பல்வேறு தேவைகளுக்கான கட்டிடங்கள் அமைக்கப்படவுள்ளன.

இரண்டாம் கட்டமாக 118 அடிகளுடைய இராஜ கோபுரம் அமைக்கப்பட்டு கோயில் புரருத்தாபனம் செய்யப்படவுள்ளதுடன் தீர்த்தகேணி மற்றும் பஞ்சரத கட்டிட புனரமைப்பும் மேற்கொள்ளப்படவுள்ளது.

ராஜராஜ சோழ மன்னன் காலத்திலுள்ள கல்வெட்டு இந்த தேவஸ்தானத்தில் காணப்படுவதும், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் இங்கு வருகை தருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X