2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சிறுபோக நெல் கொள்வனவிற்கு 700 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Super User   / 2013 ஓகஸ்ட் 06 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் மாவட்டத்தில் சிறுபோகத்தின் போது நெல் கொள்வனவு செய்வதற்காக இம்முறை 700 மில்லியனுக்கு மேற்பட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் நெல் கொள்வனவு சபையின் பிரதேச முகாமையாளர் ஆர். டப்ளியு. பந்துள தெரிவித்தார்.

சிறுபோகத்தின் போது அநுராதபுரம் மாவட்டத்தில் 20,000 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதோடு சம்பா ஒரு கிலோ 35 ரூபாவுக்கும் நாடு ஒரு கிலோ 32 ரூபாவுக்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

நொச்சியாகம, விலச்சிய, ராஜாங்கனை, தமுத்தேகம, புல்நேவ, கல்கிரியாகம, கலாவௌ, கெக்கிராவ, பெல்வெஹர, யகல்ல, கலென்பிந்துனுவௌ, சேனாநாயக்கா, ரம்பாவ, கஹட்டகஸ்திகிலிய, ஹொரவப்பொத்தானை, வாஹல்கட, கெப்பித்திகொள்ளாவ, பதவிய, மரதன்கடவள மற்றும் மதவாச்சிய பகுதிகளிலுள்ள களஞச்சியசாலைகளில் இந்த நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X