2025 மே 22, வியாழக்கிழமை

பதுக்கி வைத்திருந்த 150 அரிசி மூட்டைகள் மீட்பு

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 15 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

தலாவ, எப்பாவள மற்றும் கல்நேவ பகுதிகளில் பதுக்கி வைத்திருந்த 150 அரிசி மூட்டைகளை இலங்கை நுகர்வோர் அதிகார சபையின் அநுராதபுரம் மாவட்ட பிரிவு நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளது.

அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் மஹிந்த செனவிரத்னவின் ஆலோசனைப்படி மாவட்ட இணைப்பாளர் ஏ.சீ.பீ.பெரேரா உள்ளிட்ட குழுவினர் இச்சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை கல்நேவ கோப் சிட்டி நிலையத்தின் முகாமையாளர் ரூபா 70இற்கு விற்க வேண்டிய அரிசியினை ரூபா 72இற்கு விற்பனை செய்தமை, உற்பத்தி திகதி, காலாவதி திகதி மற்றும் விலை மாற்றம் செய்தமை ஆகிய குற்றங்களுக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X