2025 மே 09, வெள்ளிக்கிழமை

கல்வியியல் கண்காட்சியின் 2ஆம் நாள் நிகழ்வுகள்

Thipaan   / 2014 நவம்பர் 01 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின், 'சுற்றாடல் பாசறை 2014' கல்வியியல்  கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (31) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தொடர்ந்து மூன்று தினங்கள் இந்த கண்காட்சி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இரண்டாம் நாள் நிகழ்வுகளை, புத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

சுற்றாடல் கல்வி பாட அலகின் 16 தலைப்புக்களின் கீழ், அதிபர் எம்.எஸ்.எம்.ஹில்மியின் வழிகாட்டலில்  ஆசிரியர் மற்றும்  பெற்றோரின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட ஸாஹிரா ஆரம்பப் பாடசாலை மாணவர்களின் ஆக்கங்கள், 36 வகுப்பறைகளில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

இவற்றுக்கு மேலதிகமாக, புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி பழைய மாணவர் அமைப்பின் காட்சிக்கூடமும் மாயாஜால காட்சியும் இடம்பெறவுள்ளதுடன் ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவர்களின் காட்சிக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

சாஹிரா ஆரம்ப பாடசாலையில்  இயங்கும் விசேட கல்விப் பிரிவும் இக் கண்காட்சியில் பங்குகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X