2025 மே 19, திங்கட்கிழமை

கட்டுமானத் துறையினர் 2000 பேருக்கு பயிற்சி

Kogilavani   / 2014 ஜனவரி 30 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர், இக்பால் அலி

வடமேல் மாகாணத்தில் உள்நாட்டு வெளிநாட்டு கட்டுமானத்துறைக்குத் தேவையான மேசன் அல்லது கட்டுமானத் துறையினர் 2000 பேருக்குத் தேவையான பயிற்சிகளை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார். 

வடமேல் மாகாண லிச்சவி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வடமேல் மாகாண தொழிற்திறன் அபிவிருத்தி அதிகாரிகள் மற்
றும் ஹோல்சிம் நிறுவன அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர்,

'டமேல் மாகாண மேசன் தொழிலாளர்களைப் பயிற்றுவிக்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 120 பேர் பெப்ரவரி 3ஆம் திகதி கொடவேகரவில் பயிற்சியினை ஆரம்பிக்கவுள்ளனர். இந்தப் பயிற்சிக்காக தொழிற்திரன் அபிவிருத்தி அமைச்சினதும், ஹோலிசிம் சிறுவனத்தினதும் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் நான் மிக்க சந்தோஷமடைகின்றேன். எமது நாட்டில் பயிற்சிகள் இல்லாத இளைஞர்கள் தங்கள் காலத்தை வீணாக்குகின்றனர். பல்வேறு துறைகளிலும் தொழில்புரிபவர்களுக்கு அவர்களின் பயிற்சிகள் தொடர்பில் அவர்களிடத்தில் சான்றிதழ்கள் இல்லாமை பெரும் பிரச்சினையாகும்.

அதேபோல் பல்வேறு துறைகளிலும் தமது தனிப்பட்ட திறமைகளைக் கொண்டு பணியாற்றுபவர்களும் உள்ளனர். குருனாகலில் மாத்திரம் 35 ஆயிரம் மேசன்மார்கள் உள்ளனர். இவ்விடயம் தொடர்பில் நாம் ஹோல்சிம் நிறுவனத்துடன் கலந்துரையாடினோம். இதன்படி முதற்கட்டத்தில் 1000 மேசன்மார்களை அவர்கள் தற்போது உச்சரிக்கப்படும் 'மேசன் பாஸ்' என்ற பெயரிலிருந்து விடுவித்து அவர்களை நல்லதொரு நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

சில இளைஞர்கள் தான் ஏன் ஒரு மேசனாக வரவேண்டும் என நினைக்கின்றனர். இவ்வாறான மனநிலையினை மாற்ற வேண்டும். அடுத்த வாரத்தில் நாம் குருநாகலில் தொழிற்திறன் மத்திய நிலையம் ஒன்றினை ஆரம்பிக்க உள்ளோம்.

இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக மேசன்மார்களை மாத்திரமின்றி தொழில்நுட்பவியலாளர்களுக்கான வேலைத்திட்டம் ஒன்றினையும் ஆரம்பிக்கவுள்ளோம். இவர்களுக்கு வெளிநாடுகளில் அதிக கிராக்கி உள்ளது. 'மேசன் பாஸ்' என்ற சொல்லை நாம் மாற்றி அவர்களுக்கு 'நிர்மாணத்துறை சிற்பி' என்ற பதத்தை அறிமுகப்படுத்தவுள்ளோம். அவர்களுக்கு அவர்களுக்கான உபகரணங்கள் மற்றும் சீறுடையினையும் வழங்கவுள்ளோம். இவர்களுக்காக நிறுவனம் ஒன்றினையும் ஆரம்பிக்க எம்மால் முடியும்.

நிர்மாணத்துறை அமைப்புக்களுடன் இவர்களைத் தொடர்புபடுத்தி நல்லதோர் அமைப்பை ஏற்படுத்த நான் எதிர்பார்க்கின்றேன். இன்று ஏராளமான இளைஞர்கள் தகுதிகள் இன்றி சட்டப்படியான பாதுகாப்பில்லாத அவுஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகளுக்கு சட்டவிரோதமான முறைகளில் செல்ல முற்பட்டு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இதன்பிறகு இவ்விளைஞர்கள் படகுகளில் இவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்லாமல் உரிய தகுதிகளுடன் அந்நாடுகளுக்குச் செல்ல முடியுமான வகையில் வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்கவுள்ளோம்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X