2025 மே 23, வெள்ளிக்கிழமை

பயிற்சி அடிப்படையில் 2253 பட்டதாரிகள் அரச சேவையில் இணைவு

Kogilavani   / 2012 நவம்பர் 24 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                             (எம். சீ. சபூர்தீன்)
அநுராதபுரம் மாவட்டத்தில் 2253 பட்டதாரிகளை பயிற்சி அடிப்படையில் அரச சேவையில் இணைத்துள்ளதாக அநுராதபுரம் மாவட்டச் செயலாளர் மஹிந்த செனவிரத்ன தெரிவித்தார்.

இவ்வாறு அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களை வெற்றிடம் நிலவும் திணைக்களங்களுக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாவட்டத்தில் உள்ள பதவி வெற்றிடங்களை நிறப்புவதற்கு மேலும் 300 வெற்றிடங்கள் உள்ளதோடு 2011ஆம் ஆண்டு பட்டம் பெற்ற சகலருக்கும் நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை வெற்றிடங்களை நிரப்புவதற்காக அயல் மாவட்டங்களிலிருந்து பட்டதாரிகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X