2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தொழிற்சாலையில் பணியாற்றிய 41 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எஸ்.மும்தாஜ்)

புத்தளம் மதுரங்குளியில் அமைந்துள்ள விளையாட்டு பொம்மைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தொழில் புரியும் 41 பெண்கள் இன்று திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலைவலி, உடல் வலி மற்றும் மயக்கம் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து இப்பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விளையாட்டு பொம்மைகள் உற்பத்தி செய்யும் உற்பத்திச்சாலையில் பொம்மைகள் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு வகைத் துணிகளினால் ஏற்பட்ட ஒவ்வாமையே இதற்கு காரணம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .