2025 மே 23, வெள்ளிக்கிழமை

பண்ணை தீப்பற்றியதில் 500 கோழிகள் தீக்கிரை

Menaka Mookandi   / 2012 ஜூலை 23 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

மதுரங்குளி, வேலாசிறி கிராமத்தில் கோழிப்பண்ணை ஒன்று தீ பற்றியதால் சுமார் 500 கோழிகள் எரிந்து நாசமாகியுள்ளன. தனியார் ஒருவருக்குச் சொந்தமான மேற்படி கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ காரணமாக கோழிகளுடன் சேர்ந்த பண்ணையில் வைக்கப்பட்டிருந்த உபகரணங்களும் எரிந்துள்ளன.

குறித்த கோழிப்பண்ணையில் 20 நாட்கள் வயதுடைய புறொயிலர் வகை கோழிகள் 500 காணப்பட்டதாகவும் அவை அனைத்தும் தீக்கிரையாகியுள்ளதாகவும் தனிப்பட்ட தகராறு காரணமாகவே பண்ணைக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் கோழிப்பண்ணையின் உரிமையாளர்  தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளினை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0

  • Mohamed Monday, 23 July 2012 12:34 PM

    இது தீ வைக்கப்பட்டிருந்தால் மிகவும் கொடூரமான பாவத்தில் மனிதன் இருக்கிறான். மிகவும் கீழ்த்தரமான செயல். வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும். ஏன் இந்த கொலவெறி இவர்களுக்கு.

    Reply : 0       0

    Nazmin Tuesday, 24 July 2012 09:15 AM

    இது மனிதனின் செயல் என்று சொல்லாமல் மிருகச் செயல் என்று தான் சொல்லனும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X