2025 மே 19, திங்கட்கிழமை

சேவல் சண்டை சூதாட்ட நிலையம் முற்றுகை; 09 பேர் கைது

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 21 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

பங்கதெனிய குமாரகட்டு, நெலும்குளம் பிரதேசத்தில்   சேவல் சண்டை சூதாட்ட நிலையமொன்றை நேற்று திங்கட்கிழமை இரவு முற்றுகையிட்டதுடன், சந்தேகத்தின் பேரில் 09 பேரை கைதுசெய்ததாகவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், அங்கிருந்து 18 மோட்டார் சைக்கிள்களையும்  06 சைக்கிள்களையும் ஒரு முச்சக்கரவண்டியையும்  ஒரு வானையும் மற்றும் 02 சண்டைச் சேவல்களையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

மேற்படி  பிரதேசத்திலுள்ள வீடொன்றின் பின்புறத்தில் சில காலமாக  சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக தகவல்  கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அங்கு சென்று  முற்றுகையிட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

சூதாட்டத்திற்கு வந்திருந்தோரில் சிலர் இதன்போது தப்பிச்சென்றதாகவும் பொலிஸார் கூறினர். 

முன்னேஸ்வரம், குளியாபிட்டி, வென்னப்புவ, குமாரகட்டுவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இந்தச் சந்தேக நபர்களை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

வாரத்திற்கு ஒரு தடவை  இடம்பெறும் இந்தச் சூதாட்டத்தில், அதிகமானோர் ஈடுபடுவதாக  விசாரணையிலிருந்து தெரியவருவதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X