2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அரசியல் விழிப்புணர்வு மன்றத்தின் 1ஆம் ஆண்டின் பேராளர் மாநாடு

Gavitha   / 2014 செப்டெம்பர் 20 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றத்தின் முதலாவது ஆண்டின் பேராளர் மாநாடு வெள்ளிக்கிழமை (19) இரவு புத்தளம் நூஹமான் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்டம், இழந்துள்ள சிறுபான்மை நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக பொது மக்கள் மத்தியில்  அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பேராளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புத்தளம் மாவட்ட நிறைவேற்று பொறியியலாளர் பீ.எம்.எம். ஜிப்ரி தலைமை வகித்து, தொகுத்து வழங்கிய இந்நிகழ்வில் பெருந்தொகையான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது நான்கு முக்கியமான தரவுகள் முன்வைக்கப்பட்டன.

புத்தளம் நகரில் நாடாளுமன்ற உறுப்புரிமை வகித்த மர்ஹூம்களான எச்.எஸ். இஸ்மாயில், எம்.எச்.எம்.நைனா மரைக்கார் ஆகியோரை உள்ளடக்கிய புத்தளம் அரசியல் வரலாற்றை ஏ.டபிள்யூ. ஹஸ்மதும்  புத்தளம்  மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றம் ஆரம்பிக்கப்பட்ட வரலாற்றை ஆசிரியர் எம்.எச்.எம்.சிபாக்கும் உரையாற்றினர்.

அதன் பணிக்கூற்று மற்றும் நோக்கங்கள் பற்றி எம்.ரிம்சாதும், புத்தளம்  மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றத்தினை எவ்வாறு முன்கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றி ஏ.எப்.எம்.முஸ்ரிபும் உரையாற்றினர்.

புத்தளம் மாவட்ட அரசியல் விழிப்புணர்வு மன்றமானது சாதி, மத, கட்சிகள் வேறுபாடின்றி புத்தளம் மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களை ஒன்றிணத்து, அவர்களின் வாக்களிப்பு வீதத்தினை அதிகரிக்கச் செய்து இழந்து விட்ட சிறுபான்மை நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் தூய நோக்கில் செயற்படுவதாக நிகழ்வுக்கு தலைமை வகித்த புத்தளம் மாவட்ட நிறைவேற்று பொறியியலாளர் பீ.எம்.எம். ஜிப்ரி தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X