2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

விபத்தில் 10 வயதுச் சிறுவன் மரணம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

காக்கப்பள்ளி மெதகம வீதியில் வேகமாக வந்துகொண்டிருந்த டிப்பர் ரக வாகனமொன்று மோதியதில் முகுனுவட்டவான், அத்துவன பிரதேசத்தைச் சேர்ந்த செய்யது காதர் முஹம்மட் நிஸாம் (வயது 10) என்ற சிறுவன் மரணமடைந்ததாக  மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இவ்விபத்தில் படுகாயமடைந்த இந்தச் சிறுவன் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். இருப்பினும், அவன் மரணமடைந்துவிட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இவன் பஸ் வண்டியிலிருந்து  இறங்கி நடந்து சென்றுகொண்டிருந்தபோதே விபத்திற்குள்ளானான்.

இதேவேளை, விபத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் வாகனச் சாரதியை கைதுசெய்ததுடன், வாகனத்தை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணையை மாதம்பை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .