2025 ஜூலை 09, புதன்கிழமை

அபிவிருத்திக்கென 1080 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Kogilavani   / 2013 ஜூலை 06 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.ஹிஜாஸ்

எதிர்வரும் 2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சியினை முன்னிட்டு புத்தளம் தேர்தல் தொகுதியில் பல்வேறு அபிவிருத்திகளுக்கென 1080 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

புத்தளம் தேர்தல் தொகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திகள் தொடர்பாக புத்தளம் தொகுதியின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பிரதேச மற்றும் கிராம மட்ட அரசியல் தலைமைகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் புத்தளம் பொது நூலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதன்போதே புத்தளம் நகர பிதா இதனை தெரிவித்தார்.

இதேவேளை, 'தேசத்திற்கு மகுடம் திட்டத்திற்கமைய புத்தளம் தொகுதியில் சகல பிரதேசங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படவுள்ளதுடன் வீதிகள் பலவும் புனரமைப்பு செய்யப்படவுள்ளன. இது போன்று சுகாதார வசதிகளும் மேம்படுத்தப்படும். விவசாய வாய்கால்கள் மற்றும் குளங்கள் புனரமைப்பு செய்யப்படவுள்ளதுடன் மேலும் பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .