2025 மே 10, சனிக்கிழமை

புத்தளத்தில் கடும் காற்று; 12 வீடுகளும் 07 படகுகளும் சேதம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (22) இரவு வீசிய கடும் காற்று காரணமாக 12 வீடுகளும் 07 மீன்பிடிப் படகுகளும் சேதமடைந்துள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஆனமடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொட்டுக்கச்சி வடத்த கிராமத்தில் 03 வீடுகள் முழுமையாகவும்  05 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, ஆராச்சிக்கட்டுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 04 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

மேலும்,  கல்பிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட  07 மீன்பிடி படகுகள்  சேதமடைந்துள்ளன. இதில் ஒரு படகு பலத்த சேதமடைந்துள்ளதுடன், 06 படகுகள் சிறியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது. 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X