2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஒரு வகையான விதைகள் உண்ட 13 மாணவர்கள் பாதிப்பு

Kanagaraj   / 2014 ஒக்டோபர் 27 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். எஸ். முஸப்பிர்

ஒரு வகையான விதைகளை உட்கொண்டதாகச் சொல்லப்படும் 13 மாணவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆராச்சிக்கட்டு மஹாமாலுஎளிய கனிஷ்ட வித்தியாலயத்தினைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாணவர்கள் அந்த விதைகளை இன்று திங்கட்கிழமை பகல் உட்கொண்டுள்ளனர். குறித்த பாடசாலையில் 3ஆம் மற்றும் 4ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுள் இரு மாணவியரும் 11 மாணவர்களுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களாவர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலை கவலைக்கிடமானதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்ற போதும் அம்மாணவர்கள் சிலாபம் வைத்தியசாலையின் ஆரம்ப சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X