2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஆமைகளை பிடித்த ஐவர் கைது; 14 ஆமைகள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

மாரவில  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹத்தினிய, ஹொரகெலே பிரதேசத்திலுள்ள குளமொன்றில்  இறைச்சிக்காக கல் ஆமைகளை பிடித்ததாகக் கூறப்படும் ஐவரை மாரவில பொலிஸார்  நேற்று வியாழக்கிழமை மாலை கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து 14 கல் ஆமைகளையும் கைப்பற்றியதாகவும் மாரவில பொலிஸார் தெரிவித்தனர். 

கைப்பற்றப்பட்ட கல் ஆமைகளுடன் ஹத்தினிய பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர்கள் ஐவரையும் மாரவில நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மாரவில பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் அமித ரஞ்ஜித் தலைமையிலான குழுவினர் இது  தொடர்பில் விரிவான  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .