2025 ஜூலை 17, வியாழக்கிழமை

திவி நெகும திட்டத்தினூடாக புத்தளம் மாவட்டத்தில் 1400 விவசாயக் கூடாரங்கள்

A.P.Mathan   / 2011 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவி நெகும திட்டத்தின் ஊடாக புத்தளம் மாவட்டத்தில் 1400 விவசாயக் கூடாரங்கள் அமைக்கப்படவுள்ளன.

அத்துடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மீள் எழுச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற 51 கிராமங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 250 பேருக்கு முதற்கட்டமாக சுய தொழில் முயற்சிகளுக்கென நிர்க்குழாய் இயந்திரங்களும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் விவசாய நடவடிக்கைகளுக்காக 70ஆயிரம் ரூபா பெறுமதியான தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், அவர்கள் அதற்காக 30 ஆயிரம் ரூபா மட்டுமே தவணை முறையில் மீள செலுத்த வேண்டும் எனவும் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X